WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 22, 2015

உயிர் பாதுகாப்புக்கு தனிச்சட்டம் ஆசிரியர்கள் வலியுறுத்தல்.

ஆசிரியர்களின் உயிர் பாதுகாப்புக்கு தனிச்சட்டம் கொண்டு வர தமிழ்நாடு
பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தியுள்ளது. அதன் மாவட்ட பொதுக்குழு கூட்டம் திண்டுக்கல்லில் நடந்தது. மாவட்ட தலைவர் கிருஷ்ண தாஸ் தலைமை வகித்தார். நிர்வாகிகள் நாச்சிமுத்து, அமல்ராஜ், மணிகண்டன் முன்னிலை வகித்தனர். செயலாளர் சந்திரசேகரன் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் அய்யாக்கண்ணு பேசினார். மாவட்ட பொருளாளர் ராஜாக்கிளி நன்றி கூறினார். பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் கவுன்சிலிங் நடத்த வேண்டும். பணிநிரவல் செய்த பட்டதாரி ஆசிரியர்களை அந்தந்த மாவட்டங்களில் நியமிக்க வேண்டும். தகுதி தேர்வின்றி தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். ஆசிரியர்களின் உயிர் பாதுகாப்புக்கு தனிச்சட்டம் கொண்டு வர வேண்டும். பொதுமாறுதல் கவுன்சிலிங் விதிமுறையில் திருத்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.