WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 30, 2015

மக்கள் வெள்ளத்தில் சரித்திர நாயகன் கலாமின் இறுதிச் சடங்கு.

மக்கள் வெள்ளத்தில் சரித்திர நாயகன் கலாமின் இறுதிச் சடங்குக்கான பயண
பணிகள் நடைபெற்று வருகின்றன. மறைந்த குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் ராமேசுவரத்தில் நல்லடக்கம் செய்யப்படுகிறது. குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாமின் உடல் புதன்கிழமை நண்பகல் முதல் பொது மக்களின் அஞ்சலிக்காக ராமேசுவரம் கிழகாடு பகுதியில் வைக்கப்பட்டிருந்தது. பின்னர், முஸ்லிம் தெருவில் உள்ள அவரது வீட்டுக்கு புதன்கிழமை இரவு கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இன்று காலை அதே பகுதியில் உள்ள மசூதிக்கு கலாம் உடல் கொண்டு செல்லப்பட்டு சிறப்புத் தொழுகையும் பிரார்த்தனையும் முடிந்த பிறகு அவரது உடல், நல்லடக்கம் செய்வதற்காக ராணுவ வாகனத்தில் நகரின் முக்கிய வீதிகள் வழியாக மக்கள் வெள்ளத்தில் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. பேய்க்கரும்பு என்ற பகுதியில் அரசால் ஒதுக்கப்பட்ட இடத்தில் இறுதிச் சடங்கு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அதைத் தொடர்ந்து, முழு ராணுவ மரியாதையுடன் கலாமின் உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம்நபி, கர்நாடக முதல்வர் சித்தராமையா, கேரள முதல்வர் உம்மன் சாண்டி, புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, ஆந்திர முதல் சந்திர பாபு நாயுடு உள்ளிட்ட பல்வேறு மாநில முதல்வர்கள், மத்திய மாநில அமைச்சர்கள் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள், விஞ்ஞானிகள் கலந்து கொண்டுள்ளனர். அப்துல் கலாமின் இறுதிச் சடங்கில் தமிழக ஆளுநர் ரோசய்யா, நிதி- பொதுப் பணித் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மின்சாரத் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், வீட்டுவசதி- வேளாண்மைத் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம், நெடுஞ்சாலை- வனத் துறை அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, உயர்கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன், இளைஞர் நலன்- விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் எஸ்.சுந்தரராஜ், வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர். மக்கள் வெள்ளத்தில் சரித்திர நாயகன் கலாமின் பூத உடலை முப்படை வீரர்கள் சுமந்து செல்கின்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.