WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 30, 2015

செப்., 20 மத்திய பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு.

சி.பி.எஸ்.இ. சார்பில் மத்திய அரசு பள்ளிகளுக்கான ஆசிரியர் தகுதித்தேர்வு
செப்., 20 ல் நடக்கிறது.மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா, நவோதயா, சைனிக் போன்ற பள்ளிகளில் ஆசிரியர்களை நியமிக்க தகுதித்தேர்வு (சி.டி.இ.டி.,) நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு செப்., 20 ல் நடக்கிறது. ஆறு முதல் 9 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான 2 ம் தாள் காலை 9:30 முதல் பகல் 12 மணி வரையும், ஒன்று முதல் 5 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான முதள் தாள் பகல் 2 மணி முதல் மாலை 4:30 மணி வரையும் நடக்கிறது. முதள் தாள் எழுத பிளஸ் 2 வில் 50 சதவீத மதிப்பெண்களும், 2 ஆண்டு தொடக்க கல்வி பட்டய படிப்பும் முடித்திருக்க வேண்டும்.இரண்டாம் தாள் எழுத பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களும், பி.எட்., படிப்பும் முடித்திருக்க வேண்டும். ஓ.பி.சி., பிரிவினர் ஒரு தாள் மட்டும் எழுத தேர்வு கட்டணம் ரூ.600 ம், இரண்டு தாள்களையும் சேர்த்து எழுத ஆயிரம் ரூபாயும் செலுத்த வேண்டும். எஸ்.சி.,-எஸ்.டி., பிரிவினர் ஒரு தாள் மட்டும் எழுத ரூ.300, இரண்டு தாள்களையும் எழுத ரூ.500 செலுத்த வேண்டும்.இத்தேர்வுக்கு www.ctet.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை ஜூலை 30 முதல் ஆக., 19 வரை சமர்ப்பிக்கலாம். 'இ' சலானை ஆக., 20 வரை செலுத்தலாம். விண்ணப்ப திருத்தங்களை ஆக., 21 முதல் ஆக., 25 வரை செய்யலாம். செப்., 4 ல் அனுமதி அட்டையை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம், என்றார்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.