WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, July 30, 2015

ஆதிதிராவிடர் ஆசிரியர் கவுன்சிலிங் துவக்கம்.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல, மேல்நிலை, உயர்நிலை, நடுநிலை, ஆரம்ப
பள்ளி தலைமை ஆசிரியர்; முதுகலை பட்டதாரி ஆசிரியர்; கணினி ஆசிரியர்; உடற்கல்வி இயக்குனர் ஆகிய பதவிகளுக்கு, இந்த கல்வி ஆண்டிற்கான பொது மாறுதல் கலந்தாய்வு, நேற்று நடந்தது. அந்தந்த மாவட்ட ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல அலுவலகத்தில்,'ஆன் - லைன்' மூலம் மாறுதல் கோரி பதிவு செய்து, விண்ணப்பித்தவர் மட்டும்,'ஆன் - லைன்' கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதியளிக்கப்பட்டது. மொத்தம், 314 பேர் விண்ணப்பித்திருந்தனர். நேற்று நடந்த கலந்தாய்வில், 54 பேர் பங்கேற்கவில்லை. 191 பேருக்கு விரும்பிய இடம் கிடைக்காததால் இடமாறுதலை கைவிட்டனர். 69 பேர் விரும்பிய இடத்திற்கு மாற்றம் செய்யப்பட்டனர். இரண்டாவது நாளாக, இன்று, பட்டதாரி ஆசிரியர்; தமிழாசிரியர்; இடை நிலை ஆசிரியர்; உயர் கல்வி ஆசிரியர் ஆகிய பதவிகளுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கிறது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.