WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, July 29, 2015

சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு ஹால் டிக்கெட்.

ஐஏஎஸ், ஐஎப்எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட பணிகளில் 1,129 காலியிடங்களையும்,
இதேபோல், இந்திய வனப்பணியில் (ஐஎப்எஸ்) 110 காலியிடங்களையும் நிரப்பும் வகையில் ஒருங்கிணைந்த சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதம் 23-ம் தேதி சென்னை, மதுரை, கோவை உட்பட நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் நடைபெற உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டு (ஹால் டிக்கெட்) இணையதளத்தில் (www.upsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட்டு தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.