WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, July 14, 2015

யு.ஜி.சி., பட்டியலில் அரசு கல்லூரிகளுக்கு நழுவியது வாய்ப்பு! ண ஏமாற்றத்தில் மாணவர்கள், ஆசிரியர்கள்.

'டி.டி.யு., - கவுசால்' மையம் துவங்க தகுதியுடைய கல்வி நிறுவனங்களின் பெயர்
பட்டியலை யு.ஜி.சி., வெளியிட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஒரு அரசுக் கல்லுாரிக்கும் இடம் கிடைக்காதது அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) சார்பில் 'தீன தயாள் உபத்யா'(டி.டி.யு.,) - கவுசால் எனும் துறை ரீதியான திறன் மேம்பாட்டு மையங்கள் துவங்குவதற்கான நிதிபெற, நாட்டிலுள்ள பல்கலை, கல்லுாரிகள் விண்ணப்பித்திருந்தன. இதற்கென, ௭௦௮ பல்கலை, கல்லுாரிகளின் உறுப்பினர்கள் கடந்த மாத இறுதியில், டில்லியிலுள்ள யு.ஜி.சி., அதிகாரிகளிடம் கருத்துகளை பதிவுசெய்து வந்தனர். தற்போது வெளியான முடிவில், ௪௮ உதவிபெறும் கல்வி நிறுவனங்கள், ௧௭ சுயநிதி நிறுனங்கள் என, ௬௫ கல்வி நிறுவனங்கள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன; ௬௪௩ நிறுவனங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை, உதவிபெறும் கல்வி நிறுவனங்கள் பட்டியலில் ஒரு பல்கலையும், மூன்று கல்லுாரிகளும் இடம்பெற்றுள்ளன. சுயநிதி பிரிவில், ஆறு கல்லுாரிகள் தேர்வுசெய்யப்பட்டுள்ளன. இதில், கோவையிலுள்ள ஒரு இன்ஜி., கல்லுாரி மற்றும் இரு கலைக் கல்லுாரிகள் அடங்கும். பிற மாநிலங்களிலிருந்து விரல் விட்டு எண்ணும் அளவு அரசு கல்லுாரிகள் தேர்வாகியுள்ளன. ஆனால், தமிழகத்திலிருந்து பங்கேற்ற அரசுக் கலை மற்றும் பொறியியல் கல்லுாரிகளில் எந்த ஒரு கல்லுாரியும் தேர்வு செய்யப்படவில்லை என்பதால், மாணவர்கள், ஆசிரியர் மத்தியில் ஏமாற்றம் அளிக்கிறது.அரசுக் கல்லுாரி முதல்வர் ஒருவர் கூறியதாவது: 'டி.டி.யு., - கவுசால்' மையத்தில் அன்றாட வாழ்க்கைக்கேற்ற பாடங்கள் துவங்கி, சான்றிதழ் மற்றும் டிப்ளமோ படிப்புகள் வழங்கலாம். இதனால், மாணவர்களிடையே பொது அறிவு, தொழில்சார்ந்த அறிவு மேம்படும்; வேலைவாய்ப்பும் அதிகரிக்கும். ஏழை மாணவர்கள் அதிகம் பயிலும் அரசு கல்லுாரிகளில் இம்மையம் துவங்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்காக, டில்லியிலுள்ள யு.ஜி.சி., அதிகாரிகளிடம் நன்றாகவே 'பிரசன்டேஷன்' செய்தோம். அதை பார்த்த அதிகாரிகள், ௯௯ சதவீதம் மையம் துவங்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது என்றனர். ஆனால், முடிவு வந்தவுடன் அதிர்ச்சியாக உள்ளது. தமிழகத்திலிருந்து ஒரு அரசுக் கல்லுாரியும்கூட தேர்வு செய்யவில்லை. தொழில்சார்ந்த பாடங்கள் உள்ள கல்லுாரிகளுக்கே முன்னுரிமை அளிக்கப்படும் என்பது இப்போது தான் தெரிந்தது. தற்போது, வாய்ப்பு கிடைக்காதது, அனைவருக்கும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. ஏழை மாணவர்கள் பயிலும் இதுபோன்ற அரசு கல்லுாரிகளுக்கு இனிவரும் காலங்களில் யு.ஜி.சி., அதிக வாய்ப்பளிக்க வேண்டும்.இவ்வாறு, முதல்வர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.