சிவகங்கை:தமிழகத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 பேர் என 2 ஆயிரம்
தலைமை ஆசிரியர்களுக்கு தலைமை பண்பு பயிற்சி அளிக்க மத்திய அரசு ஏற்பாடு செய்துள்ளது.
அரசு உயர், மேனிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு இந்த தலைமை பண்பு பயிற்சி அளிக்க, மத்திய மனித வளத்துறை ஏற்பாடு செய் துள்ளது. அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் சார்பில், ஒவ் வொரு மாவட்டத்திலும் 50க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர் களுக்கு ஆண்டுக்கு 10நாட்கள் இப்பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாண்டுக்கான முதல் கட்ட பயிற்சி ஜூலை 14ல் துவங்கி 18ல் முடிகிறது.
இரண்டாவது கட்டமாக ஜூலை 28ல் ஆரம் பித்து ஆகஸ்ட் 1ல் முடிகிறது. ஒவ்வொரு மூன்றாண்டுக்கான ஒரு பள்ளியின் வளர்ச்சி திட்டம், மாணவர், ஆசிரியர் திறன்களை வளர்த்தல், கற்றல், கற்பித்தல் முறையில் புதிய மாற்றம், மாறிவரும் சூழலுக்கு தக்கவாறு மாணவர் களை தயார் செய்தல் போன்ற பல்வேறு வளர்ச்சிக்காக இப் பயிற்சி அமைகிறது.
பயிற்சி பெற்றவர்களின் ஆய்வறிக்கையை பெறும் திட்டமும் உள்ளது என, கல்வித்துறை அதிகாரிகள் தெரி விக்கின்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.