கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்களை தேசிய போட்டித்தேர்வுகளில்
பங்கேற்க செய்ய சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.'உயர்கல்விக்கான தேசிய போட்டித் தேர்வுகளில் கிராமப்புற அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்பு இல்லை' என ஆய்வில் தெரிந்துள்ளது. இதனால் கிராமங்களில் பத்தாம் வகுப்பு, பிளஸ்- 2 மாணவர்களுக்கு விடுமுறை நாட்களில் சிறப்பு பயிற்சி அளிக்கும் திட்டம், அனைவருக்கும் இடைநிலை கல்வி (ஆர். எம்.எஸ்.ஏ.,) மூலம் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் 50 பேருக்கு பயிற்சி அளிக்கப்படும். உயர்கல்விக்காக தேசிய அளவில் நடக்கும் தேர்வுகள், கல்வி உதவித் தொகை, தேர்வுக்கு தயாராகும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்படும். இதற்கான மாணவர்கள் தேர்வு விரைவில் நடக்க உள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.