தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், காவல் உதவி ஆய்வாளர் (சப்-இன்ஸ்பெக்டர்) எழுத்துத் தேர்வு முடிவை இணையதளத்தில் சனிக்கிழமை
வெளியிட்டது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் காவல் துறையில் உள்ள 1,078 உதவி ஆய்வாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வை சில மாதங்களுக்கு முன் அறிவித்தது.
இதில், 20 சதவீதம் பணியிடங்களில் அத்துறையைச் சேர்ந்தவர்களையே தேர்வு மூலம் தேர்வு செய்ய உள்ளதாகவும் தேர்வு வாரியம் கூறியது.
இந்தத் தேர்வில் பங்கேற்க 1.65 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்.
இந்தத் தேர்வின் முதல் கட்டமாக எழுத்துத் தேர்வும், பின்னர் உடல் தகுதித் தேர்வும், நேர்முகத் தேர்வும் நடத்த முடிவு செய்யப்பட்டது.
இதில் பொது ஒதுக்கீட்டுதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு கடந்த மே மாதம் 23-ஆம் தேதி மாநிலம் முழுவதும் 114 தேர்வு மையங்களில் நடைபெற்றது. விண்ணப்பித்தவர்களில் சுமார் 80 சதவீதம் பேர் தேர்வு எழுதினர்.
இதேபோல காவல்துறை ஒதுக்கீட்டுதாரர்களுக்கு எழுத்துத் தேர்வு அதே மாதம் 24-ஆம் தேதி நடைபெற்றது.
இந்தத் தேர்வுகளின் முடிவுகளை தேர்வு வாரியம் ஜ்ஜ்ஜ்.ற்ய்ன்ள்ழ்க்ஷங்ஷ்ஹம்ள்.ய்ங்ற் என்ற இணையதளத்தில் சனிக்கிழமை வெளியிட்டது. தேர்வு முடிவை விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண், கடவுச் சொல்லைப் பயன்படுத்தித் தெரிந்து கொள்ளலாம்.
தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் உடல் தகுதித் தேர்வுக்கான அழைப்புக் கடித்ததை அதே இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
உடல் தகுதித் தேர்வு, உடற்கூறு அளத்தல், உடல் திறன் போட்டி, அசல் சான்றிதழ் சரிபார்ப்பு ஆகியவை ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நடைபெறுகின்றன.
இத் தேர்வு, சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், வேலூர், சேலம், கோயம்புத்தூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, ராமநாதபுரம், திருநெல்வேலி ஆகிய 11 இடங்களில் நடைபெறுகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.