ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக விரைவில் அறிவிப்பு
வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறை அண்மையில் வெளியிட்டது. அதில், ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் மட்டுமே பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்பது உள்ளிட்ட புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், வருகிற 29-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 18 வரை பணியிட மாறுதல் கலந்தாய்வு நடத்த உத்தேச அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாயின.
இதுதொடர்பாக அதிகாரிகள் கூறுகையில், இந்தக் கால அட்டவணை இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
அரசிடம் அனுமதி பெற்ற பிறகு, விரைவில் அதிகாரப்பூர்வ கலந்தாய்வு அட்டவணை வெளியிடப்படும்
என்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.