மாணவர்களிடையே ஏற்படும் ஜாதி மோதல்களுக்கு பின்புலமாக செயல்படும்
ஆசிரியர்கள் மீது துறை வாரியான நடவடிக்கை எடுக்க, முதன்மை கல்வி அலுவலருக்கு விருதுநகர் எஸ்.பி., பரிந்துரைத்துள்ளார். வத்திராயிருப்<பு, ராஜபாளையம் ,ஸ்ரீவில்லிபுத்தூர், கிருஷ்ணன்கோவில் உட்பட மாவட்டத்தில் பல பகுதிகளில் மாணவர்களிடையே ஏற்படும் ஜாதி மோதல்களால் அடிக்கடி மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.
கடந்த 29ல் வத்திராயிருப்பு அருகே கான்சாபுரம், ஆத்தரங்கரைப்பட்டி, ராமசாமியாபுரத்தில் பள்ளி மாணவர்களிடையே நடந்த ஜாதி மோதலில் மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டது. இது போல் மாவட்டத்தில் பல பகுதிகளில் மாணவர்கள் ஜாதியின் பெயரால் மோதிக்கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகிறது. வத்திராயிருப்பு, வ.புதுப்பட்டி, மகாராஜபுரம், கூமாபட்டி, மேலதாயில்பட்டி, கல்லமநாயக்கன்பட்டி, கீழராஜகுலராமன், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர் உட்பட பல ஊர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலர் மாணவர்களுக்கு பின்புலமாக இருந்து செயல்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.
அந்த ஆசிரியர்களை கண்டறிந்து துறைவாரியாக நடவடிக்கை எடுக்க, முதன்மை கல்வி அலுவலரிடம் விருதுநகர் எஸ்.பி., மகேஷ்வரன் பரிந்துரைத்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.