பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதியவர்கள், விடைத்தாள் நகலை இணைய
தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம்' என, அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.இதுகுறித்து, அரசுத் தேர்வுத் துறை இயக்குனர் (பொறுப்பு) வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் நடந்த, பிளஸ் 2 உடனடி துணைத் தேர்வு எழுதி, விடைத்தாள் நகல் கேட்டவர்கள், தங்கள் விடைத்தாள் நகலை, இன்று காலை, 10:00 மணி முதல், scan.tndge.in என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மறுகூட்டல் மற்றும் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க, Application for Retotalling/ Revaluation என்ற தலைப்பிலுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை, வரும், 5 மற்றும் 6ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தை, பணமாக செலுத்தலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.