பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் விவரம்
சேகரிக்கும் பணியை உடனடியாக துவக்கி, ஆக., 30க்குள் அளிக்க, அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.நடப்பு கல்வியாண்டில், பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர், 2016, மார்ச் மாதம் பொதுத்தேர்வு எழுத உள்ளனர். அரசு பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகளில், நடப்பாண்டில் இத்தேர்வு எழுத உள்ளோரின் முழு விவரங்களை, பள்ளி அளவில் சேகரிக்குமாறு, அரசு தேர்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது. இம்மாதம், 30ல் துவங்கி, ஆக., 30க்குள், இப்பணியை முடித்து, அரசு தேர்வுத்துறைக்கு அனுப்ப வேண்டும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.மாணவர் அல்லது மாணவி பெயர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் பெயர், மதம், இனம், பிறந்த தேதி, ரேஷன் கார்டு எண், ஆதார் அட்டை எண், மாற்றுத்திறனாளி போன்ற விவரங்களை சேகரிக்க வேண்டும். ஆதார் கார்டு பெறாதவர்களுக்கு, அந்த எண் கட்டாயமில்லை. வகுப்பு ஆசிரியர்களின் வாயிலாக, மாணவர் விவரங்களை சேகரித்து, தலைமை ஆசிரியர்கள் அவற்றை சரிபார்க்க வேண்டும். மாணவரின் பெற்றோர் அல்லது பாதுகாவலரை பள்ளிக்கு வரவழைத்து, மாணவர் அல்லது மாணவி பற்றிய விவரங்கள் சரியானவை என, உறுதிப்படுத்த வேண்டும்.பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுவோர், கட்டாயம், 14 வயது பூர்த்தியடைந்தவராக இருத்தல் அவசியம். தந்தை பெயரின் முதல் எழுத்து, மாணவர் பிறந்த தேதி போன்றவற்றில், கடந்த ஆண்டுகளில் பிழை ஏற்பட்டதால், மாணவ, மாணவியர் பாதிக்கப்பட்டனர். அதுபோன்ற தவறு, நடப்பு கல்வியாண்டில் ஏற்படக்கூடாது என்பதற்காக, இவ்விவரங்கள் சரியாக சேகரித்து, பட்டியலிட்டு, கோரப்பட்டுள்ளது.மாவட்ட கல்வி அலுவலகம், முதன்மை கல்வி அலுவலகம் வாயிலாக, விவர பட்டியலை அளிக்கவும், அங்கிருந்து அரசு தேர்வுத்துறைக்கு அனுப்பி வைக்கவும்,கல்வித்துறைக்கு, அரசு தேர்வுகள் துறை அறிவுறுத்தியுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.