WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Wednesday, August 12, 2015

அரசு பள்ளி ஆசிரியர் இடமாறுதல் கவுன்சலிங்விண்ணப்பித்தவர்களுக்கு மட்டுமே அனுமதி.

இன்று துவங்க உள்ள ஆசிரியர் இடமாறுதல் கவுன்சலிங்கில், விண்ணப்பித்த
ஆசிரியர்களை தவிர, மற்ற ஆசிரியர்கள் எக்காரணம் கொண்டும் அலுவலகத்துக்கு வரக்கூடாது' என, உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில், அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான கவுன்சலிங், இன்று துவங்கி, வரும், செப்டம்பர், 3ம் தேதி வரை, நடக்கிறது. வழக்கமாக, மாறுதல் கேட்டு விண்ணப்பித்த ஆசிரியர்கள் மட்டுமின்றி, ஆசிரியர் சங்கத்தினர், தலைமை ஆசிரியர்கள் மற்றும் அவரது நண்பர்கள் என, பலரும், கவுன்சலிங் நடக்கும் மையத்துக்கு வருவர்.இதனால், அந்த இடங்களில் கூட்டம் நிரம்பி வழியும். அதில், ஒரு சில காரணங்களுக்காக, ஆசிரியர் சங்க நிர்வாகிகள் திடீர் ஆர்ப்பாட்டம், சாலைமறியல் ஆகியவற்றிலும் இறங்கிய சம்பவங்களால், கவுன்சலிங் பாதிக்கப்படும். தற்போது, ஆன்லைன் முறையில் கவுன்சலிங் நடத்தப்படுவதால், அதை தடையின்றி நடத்தி முடிக்க, பல்வேறு சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.தடையில்லா மின்சாரம், இன்டர்நெட் வசதி உள்ளிட்டவை பிரத்யேகமாக தயார் செய்யப்பட்டுள்ளது. மேலும், "மாறுதல் கேட்டு விண்ணப்பித்த ஆசிரியர்கள் மட்டுமே, கவுன்சலிங் நடக்கும் மையத்துக்கு வர வேண்டும்' என, இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ஞானகவுரி கூறுகையில், ""சேலம் மாவட்ட ஆசிரியர்களுக்கான கவுன்சலிங், சேலம் நான்கு ரோடு சிறுமலர் மேல்நிலைபள்ளியில் நடக்கிறது. இதில், விண்ணப்பித்தவர்கள் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்,'' என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.