WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, August 20, 2015

ஒரே பணியிடத்தில் பல ஆசிரியர்கள் நியமனம்.

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் ஒரே பணியிடத்தில் பல ஆசிரியர்களை
நியமித்தது தெரியவந்துள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 8 ம் வகுப்பு வரை 3 ஆசிரியர் பணியிடங்கள், 9 முதல் 10 ம் வகுப்பு 5 ஆசிரியர் பணியிடங்கள் இருக்க வேண்டும். அதன்பின் மாணவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு சென்ற ஆண்டு செப்., 26 ல் பணி நியமனம் வழங்கப்பட்டன. இதில் ஒரே காலியிடத்திற்கு பல பேரை நியமித்துள்ளனர். பணியில் சேர்ந்த அனைவருக்கும் முறையாக ஊதியம் வழங்கப்பட்டதால், முறைகேடு பணிநியமனம் குறித்து யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்த ஆண்டு உபரி ஆசிரியர்களை பணி நிரவல் செய்ய பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 240 உபரி ஆசிரியர்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதில் 130 ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட உள்ளனர். இவர்கள் அனைவரும் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்று சென்ற ஆண்டு நியமிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. இதனால் பணிநிரவல் செய்வதற்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக தலைவர் கிருஷ்ணதாஸ் கூறியதாவது: ஒரு பணியிடத்திற்கு பல ஆசிரியர்களை தெரிந்தே நியமித்துவிட்டு, தற்போது பணி நிரவல் செய்கின்றனர். பணி நிரவல் நடக்கும் நாளில் முதன்மை கல்வி அலுவலகங்களை முற்றுகையிட உள்ளோம். பலர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளனர், என்றார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.