அரசு, நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், முதுகலை
ஆசிரியர்கள், பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பாசிரியர்களுக்கான ஆன்லைன் இடமாறுதல் கவுன்சிலிங் ஆக.,12ல் துவங்க உள்ளது. அதில் பங்கேற்க விரும்புவோர் அதற்கான விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமையாசிரியர் மூலம் ஒரு ஆசிரியரை நியமித்து விருதுநகர் கல்வி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் இன்று காலை 10 மணிக்கும், அருப்புக்கோட்டை கல்விமாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் நாளையும், ஸ்ரீவி., கல்வி மாவட்டத்தைச்சேர்ந்தவர்கள் நாளைமறுநாளும், விருதுநகர் ஸ்ரீவித்யா இன்ஜினியரிங் கல்லூரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். அவ்விபரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்படும் என, முதன்மைக்கல்வி அதிகாரி புகழேந்தி தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.