WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, September 21, 2015

வேலை நிறுத்த ஆயத்தக் கூட்டம்.

அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில், வேலை
நிறுத்தம் சம்பந்தமான ஆயத்த கூட்டம் நடந்தது. விழுப்புரம் பீமநாயக்கன் தோப்பு, நகராட்சி மேல் நிலை பள்ளியில் நடந்த கூட்டத்திற்கு மாவட்ட தொடர்பாளர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். தொடர்பாளர் பாலன் முன் னிலை வகித்தார். பொறுப் பாளர்கள் சுந்தரமூர்த்தி, முருகன் சிறப்புரையாற்றினர். தமிழக அரசு கூட்டு நடவடிக்கை குழுவினரை அழைத்து பேசி, 6வது ஊதி யக்குழுவில் தமிழக ஆசிரியர்களுக்கு, மத்திய அரசு வழங்குவது போல் ஊதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறை படுத்த வேண்டும். இவற்றை வலியுறுத்தி, வரும் அக்., 8ம் தேதி அனைத்து ஆசிரியர்களையும், வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்க செய்தல், உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இதில் ஆசிரியர் சங்க பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.