WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, October 27, 2015

சட்டசபையில் 110வது விதியில் அறிவித்த 959 பாடப்பிரிவுகளுக்கு பேராசிரியர் இல்லை?

சட்டசபையில், 110வது விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட, 959 புதிய
பாடப்பிரிவுகளுக்கு, அரசு கல்லுாரிகளில் பேராசிரியர்கள் இல்லை; இதனால், மாணவர்கள் அவதிக்குள்ளாகி உள்ளனர். தமிழக அரசு கட்டுப்பாட்டில், 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 1,000 பாடப்பிரிவுகள்; 8,000 பேராசிரியர்கள் உள்ளனர். தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு தேவைக்கேற்ப, புதிய பாடப்பிரிவுகளை துவக்க, பேராசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நான்கு ஆண்டு களில், சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வரால், 959 பாடப்பிரிவுகள் புதிதாக அறிவிக்கப்பட்டன. இவற்றில், எம்.பில்., மற்றும் பிஎச்.டி.,யில், 300 பாடப்பிரிவுகளும் அடங்கும். ஆனால், புதிய பாடப்பிரிவுகளுக்கு தனியாக பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை; கூடுதல் வகுப்பறைகளும் இல்லை. கல்லுாரிகளில், ஏற்கனவே உள்ள வகுப்பறையை பிரித்து, கடும் இடநெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், புதிய பாடப்பிரிவுக்கான வகுப்பறைகளை ஏற்படுத்த வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து, கல்லுாரி பேராசிரியர்கள் கூறியதாவது: புதிய பாடப்பிரிவுகளில், இளங்கலைக்கு, ஆண்டுக்கு இரண்டு பேராசிரியர் என, மூன்று ஆண்டுகளுக்கு, ஆறு பேர்; முதுகலைக்கு, ஆண்டுக்கு இரண்டு பேர் வீதம், இரண்டு ஆண்டுகளுக்கு நான்கு பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அப்படி நியமிக்காததால், புதிய பாடப்பிரிவுகளில் சேர்ந்த மாணவர்கள், வேறு பாடப்பிரிவுகளுக்கு மாறும் அபாயம் உள்ளது. எனவே, தமிழக அரசு, விரைவில் இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.