WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 5, 2015

தேவை 1 கோடி ஆசிரியர்கள்; யுனெஸ்கோ தகவல்.

சர்வதேச அளவில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வியை
அளிக்க வேண்டும் என்பதே, சர்வதேச ஆசிரியர்கள் தினத்தில் நாம் எடுத்திருக்கும் தீர்மானம் என்று யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது. சர்வதேச ஆசிரியர் தினம் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் 05ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. யுனெஸ்கோ அமைப்பு, இந்தாண்டை. குழந்தை பருவ கல்வி ஆண்டாக கொண்டாட தீர்மானித்துள்ளது. சர்வதேச அளவில் உள்ள நாடுகளில் குழந்தைகள் ஆரம்ப கல்வி பெறாமல் அதிக அவதிப்படுகின்றனர். இதனால் அவர்களின் வாழ்க்கைத்தரம் மட்டுமல்லாது அவர்களது எதிர்காலமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறைந்த பயிற்சி, குறைவான ஊழியர்கள் மற்றும் அதற்கேற்ற நிதி ஒதுக்கீடு செய்யாததன் காரணத்தினாலேயே குழந்தைகளுக்கு ஆரம்ப கல்வி கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. 2020ம் ஆண்டிற்குள் அனைத்து குழந்தைகளுக்கும் ஆரம்ப கல்வி கிடைக்க வேண்டுமென்றால், 10.9 மில்லியன் (1 கோடியே 10 லட்சம்) ஆசிரியர்கள் தேவைப்படுவதாக யுனெஸ்கோ அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.