மதுரை:இன்றைய தேதியான 5.10.2015க்கு ஒரு சிறப்பம்சம் உள்ளது. இதை
அப்படியே பின்னால் இருந்து திருப்பி எழுதினாலும் 5.10.2015 என்ற தான் வரும். இதை ஆங்கிலத்தில் "பாலின்டிரோம்' என்பர்.
ஒரு எண்ணையோ அல்லது எழுத்தையோ எழுதி, பின்னால் இருந்து படித்தாலும் மாறாமல் வருவதை ஆங்கிலத்தில் "பாலின்டிரோம்' என்பர். தமிழில் "விகடகவி' என்ற வார்த்தையை இதற்கு எடுத்துக்காட்டாக கூறலாம்.
இன்றைய தினம் ஏழு இலக்கங்களை கொண்ட "பாலின்டிரோம்' தேதி. 5ம் எண்ணுக்கு கடவுளின் கருணை என்றும், 10ம் எண்ணுக்கு சாட்சி என்றும், 20ம் எண்ணுக்கு மீட்பு என்றும், 15ம் எண்ணுக்கு ஓய்வு என்றும் பொருள் இருக்கிறதாம். அதனால் இந்த தேதிக்கு "ஓய்வு மற்றும் மீட்புக்கு கடவுளின் கருணை தான் சாட்சி' என்ற பொருளும் இருக்கிறது என எண்கணித நிபுணர்கள் கூறுகின்றனர்.
இந்த நூற்றாண்டில் எழு இலக்கங்களை கொண்ட 26 தேதியும், எட்டு இலக்கங்களை கொண்ட 12 தேதியும்,மொத்தம் 38 "பாலின்டிரோம்' தேதி வருகிறது. 2016, அக்டோபர் 6 அன்று (6.10.2016) அடுத்த "பாலின்டிரோம்' தேதி வருகிறது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.