டி.என்.பி.எஸ்.சி.,தொகுதி-I தேர்வில் அடங்கிய பல்வேறு பதவிகளுக்கு, 74
காலிப் பணியிடங்களுக்கான முதனிலை எழுத்துத் தேர்வு வருகிற நவம்பர் 8ம் தேதி அன்று நடைபெற உள்ளது.
இத்தேர்வுக்கு விண்ணப்பித்த விண்ணப்பதாரர்கள் தங்களது பதிவு எண்ணை உள்ளீடு செய்து விண்ணப்பத்தினை தேர்வாணையத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கான விவரத்தினை தேர்வாணைய இணையதளம் www.tnpsc.gov.in மூலம் சரிபார்த்துக் கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்தி வெளியிட்டு உள்ளது.
மேலும், சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக்கட்டணம் மற்றும் தேர்வுக் கட்டணம் செலுத்தியிருந்தும் அவர்களது விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட விவரம் இணையதளத்தில் இல்லாவிடில், அவ்விண்ணப்பதாரர்கள் பணம் செலுத்தியதற்கான செலுத்துச் சீட்டின் நகலுடன், தொகுதி-I பதவிக்கான விண்ணப்ப பதிவு எண், விண்ணப்ப/தேர்வுக் கட்டணம் (ரூபாய்), மற்றும் கட்டணம் செலுத்திய இடம்: அஞ்சலகம்/இந்தியன் வங்கி வங்கிக்கிளை/ அஞ்சலக முகவரி, ஆகியவற்றை தேர்வாணையத்தின் மின்னஞ்சல் முகவரியான contacttnpsc@gmail.comக்கு, அக்டோபர் 13ம் தேதிக்குள் அனுப்புமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.