கம்ப்யூட்டர், தொழிற்கல்வி வேளாண்மை ஆசிரியர்களுக்கு கலந்தாய்வுக்கான
தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளதால், தயார் நிலையில் இருக்க, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
மாநிலத்தில், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் சிறப்புத் தேர்வு மற்றும் நேரடி நியமனம் வாயிலாக, பணி நியமனம் செய்யப்பட்ட, கம்ப்யூட்டர் மற்றும் வேளாண் ஆசிரியர்களுக்கு, கடந்த வாரத்தில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, இவ்விரு ஆசிரியர்களுக்கான காலி பணியிடங்கள் மிகவும் குறைந்த அளவில் இருப்பதால், கலந்தாய்வை முதன்மை கல்வி அலுவலர்களின் பொறுப்பிலேயே நடத்தி முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணி மாறுதல் மற்றும் விருப்ப மாறுதல்களுக்கு, 15ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளப்படும்.
கம்ப்யூட்டர் பிரிவுக்கான விண்ணப்பங்கள், அக்., 16, 17 தேதிகளிலும், வேளாண்மை பிரிவுக்கு, 19, 20 ஆகிய தேதிகளிலும் பரிசீலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவர்களுக்கு, விரைவில் கலந்தாய்வு தேதி அறிவிக்கப்படவுள்ளதால் உரிய நடவடிக்கைகளை முன்கூட்டியே மேற்கொண்டு தயார்நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.