WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, October 6, 2015

வினாத்தாள் வெளியானதால் மத்திய ஆசிரியர் தேர்வு ரத்து.

வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதால், மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளுக்கான தொடக்கக் கல்வி ஆசிரியர்களைத் தேர்வு செய்ய நடைபெற்ற தேர்வு ரத்து செய்யப்பட்டது.
இது தொடர்பாக கேந்திரிய வித்யாலய சங்கேதன் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கேந்திரிய வித்யாலயப் பள்ளிகளில் 2014-15, 2015-16 ஆண்டுகளுக்கான தொடக்கக் கல்வி ஆசிரியர்கள், தொடக்கக் கல்வி ஆசிரியர் (இசை) பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு ஞாயிற்றுக்கிழமை (அக். 4) காலை நடைபெற்றது.
இந்நிலையில், இந்தத் தேர்வுக்கான வினாத்தாள் முன்கூட்டியே வெளியானது தெரியவந்ததையடுத்து எழுத்துத் தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்தப் பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெறும் புதிய தேதி கேந்திரிய வித்யாலய அமைப்பின் www.kvsangathan.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வர்கள் இந்த இணையதளத்தை தொடர்ந்து பார்க்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.