WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 19, 2015

மொகரம் அரசு விடுமுறை அக்டோபர் 24-ம் தேதிக்கு மாற்றம்: தமிழக அரசு அறிவிப்பு.

இந்த ஆண்டுக்கான மொகரம் அரசு விடுமுறையானது அக்டோபர் 23-ம்
தேதிக்குப் பதில் 24-ம் தேதி என தமிழக அரசு அறிவித்துள்ளது. அக்டோபர் 23-ம் தேதியை மொகரம் விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவித்திருந்தது. மொகரம் மாதத்தின் முதல் நாளில் பிறைதெரிந்தால் 10-வது நாளில் மொகரம் திருநாள் கடைப்பிடிக்கப்படும். ஆனால், இந்த ஆண்டு முதல் நாளான அக்டோபர் 13-ம் தேதி பிறை சரியாகத் தெரியவில்லை. மறுநாள் தெரிந்தது. இதனால், 10-ம் நாளான அக்டோபர் 24-ம் தேதியை மொகரம் விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு தலைமை காஜி வேண்டுகோள் விடுத்தார். இதனை பரிசீலனை செய்த தமிழக அரசு, அக்டோபர் 23-ம்தேதிக்குப் பதிலாக 24-ம் தேதியை மொகரம் பொது விடுமுறையாக அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.