WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, October 31, 2015

பள்ளிகளில் போலி வருகை பதிவேடு; அதிகாரிகள் நடத்திய ஆய்வில் அம்பலம்.

ஜவ்வாதுமலையில், அரசு பள்ளிகளில் போலி வருகை பதிவேடு
வைத்திருந்தது, அதிகாரிகள் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலை கல்வியில் பின்தங்கிய பகுதியாக உள்ளது. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்களின் மேம்பாட்டிற்காக, 60ஒன்றிய தொடக்கப்பள்ளி, 24ஆதிதிராவிட நலத்துறை உறைவிடப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், உறைவிடப்பள்ளியில், 1,909மாணவர்களும், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், 3,465மாணவர்களும் உள்ளதாக, வருகை பதிவேட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கலெக்டர் ஞானசேகரின் உத்தரவின் படி, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில், 150க்கும் மேற்பட்ட அலுவலர்கள், ஜவ்வாதுமலையில் உள்ள அரசு பள்ளிகளில் திடீர் சோதனை நடத்தினர். இதில், வருகை பதிவேட்டில் உள்ளபடி மாணவர்கள் எண்ணிக்கை இல்லாமல் இருந்தது. ஒரே மாணவரின் பெயர், இரண்டு பள்ளிகளின் பதிவேட்டில் இருந்தது, இல்லாத மாணவர்களின் பெயர்களை கற்பனையாக எழுதி வைத்திருந்தது போன்று, 50சதவீதம் மாணவரின் பெயர் போலியாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இது குறித்து முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:
கலெக்டர் உத்தரவின் படி, ஜவ்வாதுமலையில் ஒரே நேரத்தில் பல கட்டங்களாக ஆய்வு நடத்தினாம். அப்போது உறைவிடப்பள்ளிகளில், ஒரு பள்ளியில், 96 மாணவர்கள் என்றால், அங்கு, 39 பேர் தான் வருகின்றனர். அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு தருகிறர்களா என்றால் அதுவும் இல்லை. வருகை பதிவேட்டில் உள்ள சில பெயர்களை குடியிருப்புகளுக்கு சென்று, நாங்கள் விசாரித்தபோது அந்த பெயரில் யாருமே இல்லை என, தெரியவந்தது. ஆதிதிராவிடர் நலத்துறை மூலம், அதிகளவில் குழந்தைகள் உணவு சாப்பிடுவதாக, கணக்கு காட்டி முறைகேடு செய்து வருகின்றனர். தங்கள் பதவிகளை காப்பாற்றி கொள்வதற்காக யூனியன் பள்ளி ஆசிரியர்களும், இதேபோன்று போலி வருகை பதிவேடு தயாரித்து, அரசை ஏமாற்றி வந்துள்ளனர். இதில், ஒரு சில பள்ளிகள் விதி விலக்காக உள்ளன. அவர்ளை பற்றி பிரச்னை இல்லை, இந்த ஆய்வில் கண்டறிந்த விவரங்கள் குறித்து கலெக்டருக்கு விரிவான அறிக்கை சமர்பிக்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.