WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, October 26, 2015

மத்திய அரசின் 'விர்ச்சுவல் கிளாஸ்' திட்டத்துக்கு பள்ளிகள் தயார்! விரைவில் செயல்படுத்த மாணவர்கள் ஆவல்.


மத்திய அரசின் 'விர்ச்சுவல் கிளாஸ்' திட்டத்துக்கு பள்ளிகள் தயார் நிலையில் இருப்பதால், விரைவில் செயல்படுத்த மாணவர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

படிப்பதற்கும், 'மத்திய அரசின் சார்பில் 'விர்ச்சுவல் கிளாஸ்' திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், பாடங்களை, செயல்முறையாக கற்பிப்பது மற்றும் பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் விளக்கிக்கூறும் வகையில், 'சிடி'க்களின் மூலம் பாடம் நடத்தும் நடைமுறை பின்பற்றப்பட உள்ளது.

இதனை செயல்படுத்த, மாவட்ட கல்வித்துறையின் வாயிலாக, ஒவ்வொரு மாவட்டத்திலும் குறிப்பிட்ட எண்ணிக்கையில், அரசுப்பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. திருப்பூர் மாவட்டத்தில், 25 பள்ளிகளில் திட்டத்துக்கு தேர்வாகியுள்ளன. உடுமலையில் ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி, பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெதப்பம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் குடிமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளிகள் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளன.

தேர்வு செய்யப்பட்டுள்ள பள்ளிகளிலுள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர்களே, இத்திட்டத்தின் மூலம் பாடம் நடத்தவும், அப்பள்ளிகளில் கம்ப்யூட்டர் அமைத்து, இத்திட்டத்தை செயல்படுத்த கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 'ப்ரொஜெக்டர்' கருவிகளை தயார் நிலையில் வைத்திருக்கும்படி, கடந்த செப்.,மாதம் கல்வித்துறை அறிவுறுத்தியது. தற்போது, பள்ளிகளில், இதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டு, தொழில்நுட்ப வசதிகளும் மேம்படுத்தப்பட்டுள்ளன. பள்ளிகள் தயார் நிலையில் இருப்பதால், திட்டத்தை விரைவில் செயல்படுத்த பள்ளி நிர்வாகத்தினர் மற்றும் மாணவர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

அரசின் மூலம் அறிவிக்கப்படும்

மாவட்ட கல்வித்துறையினர் கூறுகையில், 'திட்டத்தை செயல்படுத்த தேவையான உபகரணங்களை வைப்பதற்கு அரசு அறிவுறுத்தியது. இதன் அடிப்படையில், பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அரசின் மூலமே அறிவிக்கப்படும்' என்றனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.