WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, October 2, 2015

பதவி உயர்வை உதறிய ஆசிரியர்களின் இடத்தினை நிரப்ப முயற்சி

கடந்த மாதம், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்காக நடந்த கலந்தாய்வில்,
ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வை நிராகரித்ததால், 928 இடங்கள் நிரம்பவில்லை. இதை நிரப்ப, மீண்டும் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, புதிய முன்னுரிமை பட்டியலை, கல்வித்துறை வெளியிட்டுள்ளது. ஆக., 24ம் தேதி, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் பங்கேற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பலரும், எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததால், பதவி உயர்வை நிராகரித்தனர். இதனால், 928 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் நிரம்பவில்லை. இந்த காலி இடங்களை நிரப்ப, பதவி உயர்வுக்கு தகுதி வாய்ந்தோர் அடங்கிய, புதிய முன்னுரிமை பட்டியலை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. கல்வித்துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது: பட்டதாரி ஆசிரியருக்கும், முதுகலை ஆசிரியருக்கும் இடையே, சலுகை, சம்பளத்தில் பெரிய வித்தியாசம் கிடையாது. பதவி உயர்வை ஏற்றால், வேறு ஊருக்கு மாற்றலாக வேண்டுமே என பயந்து, பதவி உயர்வை வேண்டாம் என உதறி விடுகின்றனர். விரைவில் நடத்த உள்ள பதவி உயர்வு கலந்தாய்விலும், அனைத்து இடங்களும் நிரம்புமா என்பது சந்தேகம் தான்.இவ்வாறு அவர் கூறினார். காலியிடங்கள் விவரம் தமிழ் 100 ஆங்கிலம் 160 கணிதம் 80 இயற்பியல் 100 வேதியியல் 70 தாவரவியல் 63 விலங்கியல் 70 வரலாறு 143 வணிகவியல் 73 பொருளியல் 69 மொத்தம் 928

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.