WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, October 20, 2015

மாற்றுத் திறனாளிகளுக்கான ஆசிரியர், விடுதி காப்பாளர் பணியிடங்கள் அறிவிப்பு.

மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தால் அறிவிப்பு செய்யப்பட்ட துணை விடுதி காப்பாளர், இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக் காலியிடங்கள் தொடர்பாக மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்புப் பட்டியல் தயார் செய்யப்படவுள்ளது.

இது குறித்து விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் வே.ராஜாராமன் செவ்வாய்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

துணை விடுதிக்காப்பாளர்: இடைநிலை ஆசிரியர் பட்டப் படிப்புடன் ஜூனியர் டிப்ளமோ இன் டீச்சிங் தி டெப், பிளைன்ட் படிப்பு. வயது வரம்பு கிடையாது.

இடைநிலை ஆசிரியர் பணியிடம்: இடைநிலை ஆசிரியர் பட்டப் படிப்புடன் ஜூனியர் டிப்ளமோ இன் டீச்சிங் தி டெப், பிளைன்ட் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்ச்சித்தாள்-1. வயது வரம்பு கிடையாது.

பட்டதாரி ஆசிரியர் (தமிழ், ஆங்கிலம், அறிவியல், கணிதம், கணினி அறிவியல்): சம்பந்தப்பட்ட பாடப்பிரிவில் பட்டப் படிப்புடன், சீனியர் டிப்ளமோ இன் டீச்சிங் தி டெப், பிளைன்ட் மற்றும் ஆசிரியர் தகுதி தேர்ச்சித்தாள்-11. வயது வரம்பு கிடையாது.

குறிப்பிட்ட கல்வித் தகுதியுள்ள விருதுநகர் மாவட்ட பதிவுதாரர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, குடும்ப அட்டை, சாதிச்சான்று ஆகியவற்றுடன் 26.10.2015 -ம் தேதிக்குள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு நேரில் வந்து தங்களது பெயர் பரிந்துரை செய்யப்பட்டுள்ள விவரத்தினை உறுதி செய்து கொள்ளலாம்.

வேலைவாய்ப்பு அடையாள அட்டையை www.tnvelaivannippu.gov.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்யலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.