WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, October 23, 2015

ஆராய்ச்சி உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு: டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில்
தமிழ்நாடு நகரம் மற்றும் நாடு திட்டமிடல் சார்புநிலை சேவை பிரிவில் ஆராய்ச்சி உதவியாளர் (புள்ளியியல், பொருளாதாரம், நிலவியல்) பணிகளுக்கான எழுத்துத் தேர்வு குறித்த அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்தத் தேர்வு டிசம்பர் 13-ஆம் தேதி காலை, மாலை நடைபெற உள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது: விளம்பர எண்: 422 தேதி: 05.10.2015 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: Research Assistant in Statistics - 01 Research Assistant in Economics - 01 Research Assistant in Geography - 01 Research Assistant in Sociology - 01 தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் முதல் அல்லது இரண்டாம் நிலையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். சம்பளம்:மாதம் ரூ.9,300 - 34,800 + தர ஊதியம் ரூ.4,700 விண்ணப்பக் கட்டணம்:ரூ.150 தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். விண்ணப்பிக்கும் முறை:http://tnpscexams.net என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 04.11.2015 மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/notifications/16_2015_not_eng_ra_tnt_cp.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.