WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Tuesday, October 13, 2015

படிப்பை முடித்ததும் டி.சி., அண்ணா பல்கலை அதிரடி!

'படிப்பை முடித்த மாணவர்களுக்கு, உடனடியாக மாற்றுச் சான்றிதழான, டி.சி.,யை வழங்க வேண்டும்' என, அனைத்து பொறியியல் கல்லுாரிகளுக்கும், அண்ணா பல்கலைக் கழகம் உத்தரவிட்டுள்ளது. சென்னை, செம்மஞ்சேரியில் உள்ள, தனியார் இன்ஜினியரிங் கல்லுாரியின் முன்னாள் மாணவர் மதுகுமார், 27. இவர், கல்லுாரி வளாகத்தில், 6ம் தேதி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரித்ததில், மதுகுமார், 2013ம் ஆண்டிலேயே, எம்.சி.ஏ., படிப்பை முடித்த நிலையில், அவருக்கு மாற்றுச் சான்றிதழ் தர, கல்லுாரி நிர்வாகம் தாமதம் செய்ததே, தற்கொலைக்கு காரணம் என, தெரியவந்தது. இதையடுத்து, மாணவன் இறப்பு குறித்து, விரிவான விளக்கம் அளிக்கும்படி, தனியார் கல்லுாரிக்கு, அண்ணா பல்கலைக் கழகம், 'நோட்டீஸ்' அனுப்பி உள்ளது. அத்துடன், அனைத்து இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளது. அதில், 'மாணவர்கள் படிப்பை முடித்தவுடன், தாமதமின்றி மாற்றுச் சான்றிதழை வழங்க வேண்டும்; கல்வி, தேர்வு கட்டணம் நிலுவை போன்ற எந்த காரணத்துக்காகவும், சான்றிதழை நிறுத்தி வைக்கக் கூடாது' என, உத்தரவிட்டுள்ளது.புகார் செய்யுங்க...சான்றிதழ் பிரச்னை குறித்து, அண்ணா பல்கலை அதிகாரிகள் கூறும்போது, 'இப்பிரச்னை தொடர்பாக, மாணவர் மதுகுமார், எங்களை அணுகவே இல்லை; அணுகி இருந்தால், நாங்கள் விசாரித்திருப்போம். 'அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், இது போன்ற பிரச்னை ஏற்படுமானால், சம்பந்தப்பட்டவர்கள் புகார் கொடுக்கலாம்' என்றனர்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.