சென்னை மாற்றுதிறனாளிகளுக்கான மாநில ஆணையத்தால் காலியாக
உள்ள துணை விடுதி காப்பாளர், இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான மாநில அளவிலான உத்தேச பதிவு மூப்பு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
துணை விடுதி காப்பாளருக்கு இடை ஆசிரியர் பயிற்சியோடு, ஜூனியர் டிப்ளமோ இன் டீச்சிங் டெப், பிளைண்டு படித்திருக்க வேண்டும். இடை நிலை ஆசிரியர் பதவிக்கு இடைநிலை ஆசிரியர் பயிற்சி மற்றும், ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 1 முடித்து, ஜூனியர் டிப்ளமோ இன் டீச்சிங் டெப்,பிளைண்டு படித்திருக்க வேண்டும், பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு பி.ஏ., பி.எஸ்.சி, பி.லிட் பட்டப்படிப்புடன், சீனியர் டிப்ளமோ இன் டீச்சிங் டெப், பிளைண்டு முடித்து ஆசிரியர் தகுதி தேர்வு தாள் 2 ல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு இல்லை தகுதி உடைய பரிந்துரை செய்யப்பட்ட விபரத்தினை அசல் கல்வி சான்றிதழ், ரேஷன் கார்டு, சாதி சான்றிதழ் மற்றும் தீதீதீ.tணதிஞுடூச்டிதிச்ச்டிணீணீத.ஞ்ணிதி.டிண என்ற இணையத்தளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட வேலை வாய்ப்பு அடையாள அட்டை உடன் அக்.,26க்குள் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நேரில் உறுதி செய்து கொள்ளலாம். இதை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலர் ராமநாதன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.