அரசு உதவி பெறும் பள்ளி' என்ற, அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என,
பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில், 5,000 அரசு உதவி பெறும் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளின் ஆசிரியர்கள் ஊதியம் மற்றும் நிர்வாக செலவுகளை அரசே ஏற்றுக் கொள்கிறது. பல பள்ளிகள் அரசின் உதவியை பெற்றாலும், தனியார் சுயநிதி பள்ளிகள் போல, பொதுமக்களிடம் காட்டிக் கொள்கின்றன. இந்நிலையில், 'அரசு உதவி பெறும் பள்ளிகளின் நுழைவு வாயிலில், 'அரசு உதவிபெறும் பள்ளி' என்ற, அறிவிப்பு வேண்டும்' என, பா.ஜ., மாநில சட்டப்பிரிவு செயலர் சந்தர், சென்னை முதன்மை கல்வி அதிகாரியிடம் மனு கொடுத்தார்.இதை பரிசீலித்த முதன்மை கல்வி அதிகாரி அனிதா, அனைத்து அரசு உதவிபெறும் பள்ளிகளும், அரசு
உதவிபெறும் பள்ளிக்கூடம் என, பள்ளி வாசலில் அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.