WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, November 22, 2015

புதிய 1 ரூபாய் நோட்டு ஆன்லைனில் விற்பனை.

புதிய 1 ரூபாய் நோட்டுகள் ஆன்லைனில் விற்பனை செய்யப்படுகிறது. ஒரு 1
ருபாய் நோட்டு அச்சடிக்க ரூ.1–14 செலவாகிறது. எனவே மத்திய அரசு கடந்த 1994–ம் ஆண்டு முதல் 1 ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பதை நிறுத்தி விட்டது. நாணயங்கள் மட்டும் புழக்கத்தில் இருந்து வந்தன. அதே போன்று 2 ரூபாய் மற்றும் 5 ரூபாய் நோட்டுகளும் அச்சடிப்பது நிறுத்தப்பட்டது. தற்போது 20 ஆண்டுகளுக்கு பிறகு புதிதாக ஒரு ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன. இந்த புதிய ரூபாய் நோட்டுகளை ரிசர்வ் வங்கி இந்த ஆண்டு தொடக்கத்தில் மீண்டும் அறிமுகப்படுத்தியது. ஆனால் அதற்கான விற்பனை ஆன்லைனில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏனெனில் ஆன்லைனில் கூடுதல் விலை கொடுத்து வாங்கும் இந்த புதிய 1 ரூபாய் நோட்டுகளை பெரும்பாலானவர்கள் புழக்கத்தில் விடுவதில்லை. அதை பதுக்கி வைத்திருந்து கூடுதல் விலைக்கு தான் விற்க முயற்சிப்பார்கள் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.