WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, November 22, 2015

மந்தமாக வேலைசெய்யும் மத்திய அரசு பணியாளர்களுக்கு இனி சம்பள உயர்வு கிடையாது?

அலுவலக வேலை நேரத்தின்போது சுறுசுறுப்பாக பணியாற்றி பிரகாசமாக
சோபிக்காமல், கடமைக்காக அலுவகத்துக்குச் சென்று வெட்டியாக பொழுதைப்போக்கிவிட்டு வீட்டுக்கு திரும்பும் அரசு ஊழியர்களுக்கு இனி சம்பள உயர்வை அமல்படுத்தாமல் இருப்பது தொடர்பாக பரிசீலிக்கும்படி மத்திய அரசுக்கு ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது. இதற்கென ‘நன்று’, ’மிகநன்று’ என திறன்மதிப்பீட்டு அட்டவணைகளை தயாரித்து மத்திய அரசை சேர்ந்த அனைத்து பணியாளர்கள் மற்றும் அலுவலர்களின் செயல்திறன் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்ட பணிகளை சிறப்பாக செய்துமுடிக்காதவர்களுக்கு அடுத்தடுத்த ஆண்டுகளுக்கான சம்பள உயர்வை வழங்காமல் நிறுத்தி வைக்க வேண்டும். மேலும், பணியில் சேர்ந்த 20 ஆண்டுகளுக்கு பின்னர் வழக்கமான சுழற்சி முறையில் இவர்களுக்கு அளிக்கப்படும் பதவி உயர்வையும் நிறுத்தி வைக்க வேண்டும் என இந்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ஒரு தண்டனையல்ல, சிறப்பாக சேவையாற்ற மத்திய அரசின் பணியாளர்களுக்கு விதிக்கப்படும் நன்னெறியாக கருதி இதை உடனடியாக பின்பற்ற அரசு முன்வர வேண்டும் எனவும் இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.