கற்கும் பாரதம் திட்டத்தில் கடந்த 5 மாதங்களாக ஊதியம் வழங்கப்படாததால்
4500 ஊழியர்கள் பாதிப்பு அடைந்துள்ளனர். மத்திய, மாநில அரசு நிதி உதவியுடன் கற்கும் பாரதம் எழுத்தறிவு திட்டம் கடந்த 2010ம் ஆண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. 15 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு அடிப்படை எழுத்தறிவு அளிப்பது இத்திட்டத்தின் முக்கிய நோக்கியமாகும். மேலும் ஓரளவு எழுத்தறிவு பெற்றவர்களுக்கு எண்ணறிவு, வாசித்தல், தொடர்கல்வி, தொழிற்பயிற்சிகள், அரசு நலத்திட்டங்களில் விழிப்புணர்வு போன்ற அம்சங்களும் கற்பிக்கப்படுகிறது. 2001ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 50 சதவீதத்துக்கும் குறைவாக பெண்களின் எழுத்தறிவு உள்ள ஈரோடு, விழுப்புரம், திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர், சேலம், தர்மபுரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த திட்டத்திற்காக ஊக்குநர், உதவியாளர், மைய பொறுப்பாளர் பணிகள் என்று 4500 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பதவிகளுக்கு ஏற்ப ரூ.2000 முதல் ரூ.6000 வரை சம்பளம் வழங்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில், கடந்த 5 மாதங்களாக இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து, ஊழியர்கள் கூறியதாவது:
கற்கும் பாரதம் திட்டத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு குறைந்த ஊதியம்தான் வழங்கப்படுகின்றது. ஊதியத்தை தற்போதைய விலைவாசிக்கு ஏற்ப உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தோம். ஆனால் மத்திய, மாநில அரசுகள் கண்டுகொள்ளவில்லை. மேலும், கடந்த 5 மாதங்களாக ஊதிய வழங்காமல் எங்களை அரசுகள் வஞ்சித்து வருகின்றது. கடந்த ஆண்டும் இதே நிலைதான் ஏற்பட்டது. அப்போது நாடாளுமன்ற தேர்தலை காரணம் காட்டி நிதி விடுவிப்பு செய்ய முடியவில்லை என்றனர். தற்போது எவ்வித காரணமும் இல்லாமல் சம்பளம் வழங்கப்படாமல் உள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்கும், கண்காணிப்பதற்கும் மாவட்ட கல்வி அலுவலர் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களிடம், சம்பளம் பற்றி கேட்டால் முறையாக பதிலளிப்பது இல்லை. எனவே, இம்மாத இறுதிக்குள் சம்பளம் வழங்காவிட்டால் கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு கூறினர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.