WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, November 28, 2015

பிளஸ் 2: தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க டிச. 4 வரை கால அவகாசம்.

வரும் 2016 மார்ச் மாதம் நடைபெற உள்ள பிளஸ் 2 தேர்வுக்கு தனித் தேர்வர்கள்
விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பிளஸ் 2 பொதுத் தேர்வுக்கு அரசுத் தேர்வுகள் சேவை மையத்தின் மூலம் தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்க நவம்பர் 16 முதல் 27 வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. தொடர் மழை காரணமாக தனித் தேர்வர்கள், தேர்வுக்கு விண்ணப்பிக்க இயலாத சூழ்நிலை ஏற்பட்டது. அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களின் மூலமாக இணையவழியில் விண்ணப்பிக்க வேண்டும். இந்த மையங்கள் குறித்த விவரங்களை www.tndge.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.