WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Sunday, November 29, 2015

செருப்பு பட்டியலால் வெறுப்பில் ஆசிரியர்கள்.

நடப்பு ஆண்டு மாணவர்களுக்கே இன்னும் இலவச காலணிகள் முழுமையாக
வழங்காத நிலையில், அடுத்த ஆண்டுக்கான செருப்பு பட்டியலை அனுப்பு மாறு, அரசு உத்தரவிட்டுஉள்ளதால், ஆசிரியர்கள் வெறுப்பு அடைந்துள்ளனர். தமிழக அரசின் சார்பில் பள்ளி மாணவ, மாணவியருக்கு, 14 வகை இலவச திட்டங்கள் அமல்படுத்தப்படுகின்றன. இதில் இலவச பாடப்புத்தகம், நோட்டுக்கள், லேப்டாப், சைக்கிள் போன்றவை மட்டும் வழங்கப்பட்டு உள்ளன. அட்லஸ் புத்தகம், கிரயான்ஸ் பென்சில், வண்ண பென்சில், புத்தகப்பை, செருப்புகள் வழங்கப்படவில்லை. இந்நிலையில், 2016-17ம் கல்வி ஆண்டுக்கான மாணவர்களின் உத்தேச பட்டியலையும், அவர்களுக்கான செருப்பு அளவுகளையும் அனுப்புமாறு, மாவட்டக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வித் துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.