சென்னை வானிலை மைய அதிகாரி கூறியதாவது:– தென்மேற்கு வங்க
கடலில் நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து விட்டது. தற்போது தெற்கு அந்தமான் கடலில் புதிதாக கடந்த 2 நாட்களாக மேல் அடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழ் நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்துள்ளது. தெற்கு அந்தமான் கடலில் உள்ள இந்த மேல் அடுக்கு சுழற்சி அடுத்த 48 மணிநேரத்தில் (27–ந்தேதி) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகும். அதன் காரணமாக வருகிற 27, 28, 29 ஆகிய மூன்று நாட்கள் கடலோர மாவட்டங்களில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்யும். இவ்வாறு அவர் கூறினார். பாபநாசம் 10 செ.மீ. இன்று காலை 8.30 மணி நிலவரப்படி தமிழ்நாட்டில் பெய்த மழை அளவு வருமாறு:– பாபநாசம்–10 செ.மீ., மணிமுத்தாறு, அம்பாசமுத்திரம்–3 செ.மீ., திருச்செந்தூர், அறந் தாங்கி–2 செ.மீ., ராமேசுவரம், சேரன்மாதேவி, குன்னூர்– 1 செ.மீ.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.