பள்ளி வளாகங்களில், கிருமி நாசினி தெளித்து, நோய் தொற்று ஏற்படாமல்
தடுக்க, பள்ளிக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழக, பொது சுகாதார இயக்குனர் குழந்தைசாமியின் ஆலோசனையின் படி, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: பள்ளிகளின் குடிநீர் அமைப்புகள், பம்புகள், தொட்டிகளில், நோய் கிருமி தேங்கி பாதிப்பு ஏற்படாமல் தடுக்க, &'பிளீச்சிங் பவுடர்&' மூலம் சுத்தம் செய்ய வேண்டும் பள்ளி வளாகங்களில், குப்பை தேங்காமல் உடனே அகற்ற வேண்டும் கொசு உற்பத்தியை தடுக்க, பயன்படுத்தாத பொருட்களை உடனே அகற்ற வேண்டும் நீர்த்தேக்கம் உள்ள இடங்களின் அருகில், மாணவ, மாணவியர் செல்லாமல் தடுப்புகள் ஏற்படுத்த வேண்டும் நோய் தொற்று ஏற்படாமல், அனைத்து முன்னெச்சரிக்கை மற்றும் சுகாதார நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் பள்ளி வளாகங்கள், வகுப்பறைகளில் மின் சாதனங்கள் மற்றும் மின் கட்டமைப்புகளை சோதனை செய்து, மின் கசிவு ஏற்படாமல் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.