ஆதார் எண் இன்றி ஊதியம் பெறும் அரசு ஊழியர்கள், ஆசிரியர் களிடம்
கருவூல கணக்குத்துறை விளக்கம் கேட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர்கள் சமீபகாலமாக "ஆன்லைன் "இ பே ரோல்' மூலம் ஊதியம் பெற்று வருகின்றனர். இதற்காக அவர்களிடம் குடும்ப பின்னணி, ரேஷன்கார்டு, பான்கார்டு, வாக்காளர் எண் போன்ற விபரங்கள் பெறப்பட்டு "இ பே ரோலில்' பதியப்பட்டன. சில மாதங்களுக்கு முன் ஊதியம் பெறுவதற்கு ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும் என, கருவூல கணக்குத் துறை உத்தரவிட்டது. அரசு ஊழியர், ஆசிரியர்களில் சிலருக்கு ஆதார் அட்டை இல்லை. ஆதார் அட்டை இருந்தும் சிலர் பதிவு செய்யாமல் இருந்தனர். இதையடுத்து நவம்பருக்குள் ஆதார் உள்ளோர் உடனடியாக பதிவு செய்ய வேண்டும். இல்லாதோர் அதற்குரிய விளக்கத்தை அளிக்க வேண்டுமென, கருவூலத்துறை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து ஆதார் எண் இல்லாதோரிடம் விளக்கம் பெற்று சம்பந்தப்பட்ட கருவூலத்தில் ஒப்படைக்க வேண்டு மென, நிதி பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு துறைத்தலை வர்கள் உத்தரவிட்டுள்ளனர்.
இந்த மாதத்திற்குள் ஆதார் எண் அல்லது விளக்கம் தராதோருக்கு ஊதியம் வழங்குவதில் சிக்கல் ஏற்படும் என, கருவூல கணக்குத் துறையினர் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.