மாநிலம் முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்- மாணவர்
எண்ணிக்கைக்கு ஏற்ப, உபரி ஆசிரியர்கள் 2 ஆயிரம் பேர், கலந்தாய்வு இல்லாமல் விரைவில் பணிமாற்றம் செய்யப்பட உள்ளதால் கலக்கமடைந்துள்ளனர்.அரசு பள்ளிகளில் உள்ளதுபோல், உதவி பெறும் பள்ளிகளிலும் உபரி ஆசிரியர்களை கணக்கெடுத்து, ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள உதவிபெறும் பள்ளிகளில், பணிநிரவல் செய்யப்படுகின்றனர்.பணிநிரவலில் மாவட்ட கல்வி அலுவலர்கள் முடிவு செய்யும் பள்ளியே, இறுதி செய்யப்படுகின்றன. இதில் பாரபட்சம் இருப்பதால் சிலருக்கு அருகில் உள்ள பள்ளிகளிலும், சிலருக்கு தொலைவிலுள்ள பள்ளிகளிலும் பணிமாற்றம் கிடைக்கிறது என சர்ச்சை எழுந்தது.இதனால், அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு நடத்துவதுபோல் கலந்தாய்வு மூலம் பள்ளிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என கடந்தாண்டு கோரிக்கை எழுந்தது. ஆனால், நடவடிக்கை இல்லை. இந்தாண்டும் கல்வி அலுவலர்களே பள்ளிகளை முடிவு செய்ய உள்ளனர். இதனால் பட்டியலில் உள்ள 2 ஆயிரம் ஆசிரியர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக மாநில அமைப்பாளர் நாகசுப்பிரமணி, மாவட்ட செயலாளர் முருகன் கூறுகையில், "உதவிபெறும் பள்ளிகளில், பொதுவாக ஆசிரியர்கள் மறைமுகமாக லட்சக்கணக்கான ரூபாய் பணம் கொடுத்து தான் பணியில் சேருகின்றனர். இவர்களை, 'உபரி' என்ற பெயரில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு பள்ளிக்கு மாற்றம் செய்கின்றனர். அரசு ஆசிரியர்களுக்கு உள்ளதுபோல், இந்த ஆசிரியர்களுக்கும் கலந்தாய்வு நடத்தி, பணிமூப்பு அடிப்படையில் பள்ளிகள் ஒதுக்கீடு செய்ய வேண்டும்," என்றனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.