WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Saturday, November 28, 2015

ஜே.இ.இ., மெயின் தேர்வு அறிவிப்பு.

பிளஸ் 2 மாணவர்கள் தேர்வுக்கு பின், மத்திய அரசின் உயர்கல்வி
நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - ஐ.ஐ.எம்., - ஐ.ஐ.எஸ்., மற்றும் ஐ.ஐ.ஐ.டி., உள்ளிட்டவற்றில் சேர, ஜே.இ.இ., எனப்படும் ஒருங்கிணைந்த பொது நுழைவுத் தேர்வை, இரண்டு கட்டமாக எழுத வேண்டும்.முதல் கட்டமாக, பிரதானத் தேர்வையும், பின், 'ஜே.இ.இ., அட்வான்ஸ்டு' தேர்வையும் எழுத வேண்டும். இந்த தேர்வுகளில் பெறும் மதிப்பெண் மற்றும் தர வரிசைப்படி, உயர்கல்வி நிறுவனங்களில், 'ஆன் - லைன் கவுன்சிலிங்' மூலம், மாணவர் சேர்க்கை நடக்கும்.ஜே.இ.இ., அட்வான்ஸ்டு தேர்வு, 2016 மே, 22ல் நடக்கும் என, கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. தற்போது, ஜே.இ.இ., பிரதானத் தேர்வு, தேர்வு மையங்களில், ஏப்ரல், 3ம் தேதியும், ஆன் - லைனில், ஏப்., 9 மற்றும், 10ம் தேதியும் தேர்வு நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.இதற்கு ஆன் - லைனில் மட்டும் விண்ணப்பப் பதிவு, டிச., 1ம் தேதி துவங்கி, 31ல் முடிகிறது. கூடுதல் விபரங்களை, http:/www.jeemain.nic.in/ இணையதளத்தில் அறியலாம்.-

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.