பலத்த மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய
மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு செவ்வாய்க்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மூன்று மாவட்டங்களிலும் தொடர்ந்து 10-ஆவது நாளாக மாவட்ட ஆட்சியர்கள் விடுமுறையை அறிவித்துள்ளனர்.
நவம்பர் 22-ஆம் தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, 23-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கும் என அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், தொடர் மழையின் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு திங்கள்கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.
சென்னையில் செவ்வாய்க்கிழமை விடுமுறை அறிவிப்பையடுத்து, 15 நாள்களுக்கும் மேலாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.
முழு ஆண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பிறகு மாணவர்களுக்கு மழை காரணமாக மிக அதிக நாள் விடுமுறை இப்போது விடப்பட்டுள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். சென்னையில் திங்கள்கிழமை மாலை பெய்த மழையில் பெரும்பாலான பள்ளிகளில் மழைநீர் தேங்கியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.