WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, November 5, 2015

'லேப் - டாப்' பதுக்கல் பள்ளிகளுக்கு உத்தரவு.

தமிழக அரசின் இலவச திட்டத்தில், பிளஸ் 2 முடித்த மாணவர்கள்;
பாலிடெக்னிக் மாணவர்களுக்கு, 'லேப் - டாப்' வழங்கப்படுகிறது. கடந்த, 2013 - 14 கல்வி ஆண்டில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கு வழங்கியது போக, மீதி உள்ளவற்றை திருப்பி அனுப்புமாறு, பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.ஆனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மீதியிருக்கும் லேப் - டாப் பற்றிய கணக்கு, முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு இன்னும் வரவில்லை. இந்நிலையில், மீதியுள்ள லேப் - டாப்களை, உடனடியாக அனுப்புமாறு, அனைத்து பள்ளிகளுக்கும் அதிகாரிகள் உத்தர விட்டுள்ளனர்.இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது:தமிழ்நாடு மின்னணு கழகமான, 'எல்காட்' நிறுவனத்துக்கு, நாங்ள் கணக்கு கொடுக்க வேண்டும். எனவே, ஓராண்டாக பதுக்கி வைத்த, லேப் - டாப்களை உடனடியாக அனுப்ப உத்தரவிட்டுள்ளோம். அனுப்பாத தலைமை ஆசிரியர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.