WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Thursday, November 5, 2015

தீபாவளி 'புஸ்:' ஆசிரியர்கள் தவிப்பு.

ஆசிரியர்களுக்கு கடந்த மாத சம்பளம் இன்னும் வழங்கப்படவில்லை. அதனால்,
தீபாவளி பண்டிகை கொண்டாட முடியுமா என, அவர்கள் கவலைஅடைந்துள்ளனர். அரசு பள்ளிகளில், 10 ஆண்டுகளுக்கு முன் நியமிக்கப்பட்ட, 20 ஆயிரம் ஆசிரியர்கள், மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் கீழ் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கான மாத ஊதியம், மத்திய அரசின் நிதி உதவியில் இருந்து வழங்கப்படுகிறது. இந்த ஆசிரியர்களுக்கு, ஐந்து ஆண்டு களுக்கான ஊதிய ஆணை வழங்க, தமிழக அரசுக்கு பள்ளிக்கல்வித் துறை கடிதம் அனுப்பியது. ஆறு மாதங்களாக இந்த கடிதம் கிணற்றில் போட்ட கல்லாக கிடக்கிறது.அதனால், ஒவ்வொரு மாதமும் புதிய அரசாணை பிறப்பித்த பின், ஊதியம் வழங்கப்படும். ஆனால், இந்த மாதம், தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில், 20 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இன்னும் சம்பளம் வரவில்லை.இதை கண்டித்து, தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க தலைவர் தியாகராஜன் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.