WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, November 30, 2015

கடலூர், புதுவையில் பள்ளிகளுக்கு விடுமுறை.

தமிழகம் மற்றும் புதுவை கடலோர மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை
விடப்பட்டுள்ளதால், கடலுார் மற்றும் புதுச்சேரியில், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நேற்று முதல் பரவலாக மழை துவங்கியுள்ளது. இன்று கனமழை பெய்யும் என, வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது. இதனால், கடலுார் மாவட்ட பள்ளி மற்றும் கல்லுாரிகளுக்கு, இன்று விடுமுறை அறிவித்து, மாவட்ட கலெக்டர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரியில், பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிப்பதாக, கல்வி அமைச்சர் தியாகராஜன் அறிவித்து உள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.