WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Monday, November 30, 2015

மழை விடுமுறை அனுபவித்த ஆசிரியர்களுக்கு கூடுதல் பணி.

மழைக்கால விடுமுறையிலிருந்த பகுதி நேர ஆசிரியர்கள், அதற்குப் பதில்,
மாற்று நாட்களில் பணியாற்ற வேண்டும்' என, உத்தரவிடப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டமான, எஸ்.எஸ்.ஏ., இயக்குனரகக் கட்டுப்பாட்டில், கணினி, ஓவியம், உடற்கல்வி உட்பட, பல பகுதி நேர பாடப் பிரிவுகளுக்கு, 16 ஆயிரம் சிறப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வாரத்துக்கு மூன்று வகுப்புகள் பாடம் எடுக்க வேண்டும். ஆனால், பெரும்பாலும் பள்ளிகளில், முழு நேர ஆசிரியர்களாகவே பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு, ஒவ்வொரு மாதமும், பணிபுரியும் நாட்களுக்கு மட்டுமே சம்பளம் வழங்கப்படும். மே மாத விடுமுறை காலத்தில் மாத சம்பளம் கிடையாது. தற்போது மழை காரணமாக, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 12 வேலை நாட்கள் வரை விடுமுறை விடப்பட்டது. ''இந்த நாட்களுக்கு பதில், வேறு நாளில் பணிபுரிய வேண்டும். அவ்வாறு பணிபுரியாவிட்டால் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும்,'' என, அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குனர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.