WELCOME

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

KK SCROLL

Friday, November 13, 2015

பல்கலை, கல்லூரிகளுக்கு யு.ஜி.சி., கடும் எச்சரிக்கை.

மாணவ, மாணவியர் இடையே பாலின பாகுபாடு மற்றும் பாலியல்
பிரச்னைகளை தீர்க்க, கமிட்டி அமைக்காத கல்லுாரிகளுக்கு, மத்திய அரசின் பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவ, மாணவியர் இடையே, பாலின ரீதியான வேறுபாடுகளை போக்கவும், பாலியல் பிரச்னைகளை தீர்க்கவும், தனி கமிட்டிகள் அமைக்கப்பட வேண்டும்; புகார் பெட்டிகள் வைக்க வேண்டும் என, இரு மாதங்களுக்கு முன், யு.ஜி.சி., உத்தரவிட்டிருந்தது. இதுவரை, தமிழகம் உட்பட பெரும்பாலான மாநில கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில், கமிட்டிகள் அமைக்கவில்லை. கல்லுாரி வளாகங்களில், பாலியல் பிரச்னை குறித்து புகார் தெரிவிக்க, பதிவேடுகளும் வைக்கப்படவில்லை; விசாரணை அதிகாரியும் நியமிக்கவில்லை. இது தொடர்பாக, யு.ஜி.சி.,க்கு புகார் சென்றதை அடுத்து, அனைத்து பல்கலை மற்றும் கல்லுாரிகளுக்கு, 'கமிட்டி அமைக்கப்படாவிட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

No comments:

Post a Comment

குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.

-அன்புடன் கல்விக்குயில்.