அண்ணா பல்கலை பேராசிரியர்கள் நியமன அறிவிப்பை எதிர்த்து தாக்கலான
வழக்கில், பதிவாளர் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும், என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தர விட்டுள்ளது.
திருநெல்வேலி மண்டல அண்ணா பல்கலை உதவிப் பேராசிரியர் ராஜ்குமார்: சென்னை அண்ணா பல்கலை பதிவாளர் நவ.,8 ல் 102 பேராசிரியர், 178 இணை பேராசிரியர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டார். விதிகள்படி பேராசிரியர், இணைப் பேராசிரியர் காலிப்பணியிடங்களில் 75 சதவீதத்தை, ஏற்கனவே பணி புரிவோருக்கு பதவி உயர்வு மூலம் நிரப்ப வேண்டும். 25 சதவீதம் நேரடி நியமனம் செய்ய வேண்டும். விதிகளுக்குப் புறம்பாக,நேரடி நியமனம் மூலம் நிரப்ப பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, இதுபோல் வெளியான அறிவிப்பை எதிர்த்து தொடர்ந்த வழக்கில், இறுதித் தீர்ப்பை பொறுத்து நியமனம் இருக்கும், என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்நிலையில், தற்போது அறிவிப்பு வெளியிட்டது சட்டவிரோதம். அதை ரத்து செய்து பேராசிரியர், இணைப் பேராசிரியர் பணியிடங்களில் 75 சதவீதம் பதவி உயர்வு, 25 சதவீதம் நேரடியாக நியமிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு, ராஜ்குமார் மனு செய்திருந்தார்.நீதிபதி டி.ஹரிபரந்தாமன், அண்ணா பல்கலை பதிவாளர் தற்போதைய நிலை பற்றி, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்,என்றார். மனுதாரர் வழக்கறிஞர் லஜபதிராய் ஆஜரானார்.
No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.