தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணம் மூலம் நடத்தப்படும் தேர்வுகளுக்கு
விண்ணப்பிப்போர் அரசு இ-சேவை மையங்களில் பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ம. ரவிகுமார் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், அரசு இ-சேவை மையங்களை அமைத்து நிர்வகித்து வருகிறது. இந்த மையங்கள் மூலமாக தமிழக அரசின் வருவாய்த் துறை மற்றும் சமூக நலத்துறை சார்ந்த பல்வேறு சேவைகள் இணைய வழி சேவை மூலமாக வழங்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த சேவை மையங்கள் மூலமாக பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறும் வசதி, ஆதார் அட்டை பதிவு செய்யும் போது தெரிவிக்கப்பட்ட செல்லிடைப்பேசி எண்ணை மாற்றும் வசதி மற்றும் பாஸ்போர்ட் விண்ணப்பிக்கும் வசதியும் கூடுதலாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது புதியதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் விண்ணப்பதாரர்களுக்கு நிரந்தரப் பதிவு செய்தல், தேர்வுகளுக்கு விண்ணப்பித்தல், விண்ணப்பங்களில் மாறுதல் செய்தல் மற்றும் விண்ணப்பத்தின் நகல் பெறுதல் ஆகிய சேவைகள் புதியதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மையங்களில் நிரந்தரப் பதிவு செய்ய ரூ. 50-ம், தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க ரூ. 30-ம், விண்ணப்பங்களில் மாறுதல் செய்யரூ.5-ம், விண்ணப்பங்களில் மாறுதல் செய்து விண்ணப்பத்தின் நகல் பெறரூ.20-ம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு செலுத்த வேண்டிய நிரந்தரப் பதிவு கட்டணமான ரூ.50 மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தேர்வுக் கட்டணம் ஆகியவற்றையும் இ-சேவை மையங்களிலேயே செலுத்தும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பணம் செலுத்துவதற்கான ஒப்புகைச் சீட்டையு உடனடியாகப் பெற்றுக் கொள்ளலாம். எனவே, விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தால் வழங்கப்படும் இந்த சேவைகளைப் பயன்படுத்தி குறைந்த செலவில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment
குறிப்பு:
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விக்குயிலுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விக்குயில்.